Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜிசிசி மையங்களை ஈர்ப்பதில் பெங்களூருவை முந்தும் சென்னை

ஜிசிசி மையங்களை ஈர்ப்பதில் பெங்களூருவை முந்தும் சென்னை

பெங்களூருடன் ஒப்பிடுகையில், சென்னையில் அலுவலக வாடகை சதுர அடிக்கு 35 சதவீதம் வரை குறைவாக இருப்பது முதலீட்டாளர்களைக் கவரும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் செயல்படும் ஐடி நிறுவனங்கள் வெறும் சேவை சார்ந்த பணிகளை மட்டுமே செய்துவந்த காலம் மாறிவிட்டது. தற்போது செயற்கை நுண்ணறிவு, வாகனத் தொழில்நுட்பம், வங்கி, நிதி மேலாண்மை மற்றும் மருந்து ஆராய்ச்சி போன்ற உயர் தொழில்நுட்பப் பணிகளுக்கான பிரத்யேக ‘உலகளாவிய திறன் மையங்களை’ (ஜிசிசி) ஃபார்ச்சூன் 500 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் அமைத்து வருகின்றன. இந்த போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு நிகராகச் சென்னையை நோக்கிச் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை பெருமளவில் திரும்பியுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த பொறியியல் பட்டதாரிகளின் இருப்பு, தொழில் அமைதி மற்றும் மிகக் குறைந்த பணியாளர் விலகல் விகிதம் ஆகியவை சென்னைக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளன. பெங்களூருவில் 20 முதல் 25 சதவீதமாக உள்ள பணியாளர் விலகல் விகிதம், சென்னையில் வெறும் 10 முதல் 12 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது நிறுவனங்களின் பயிற்சிச் செலவையும் திட்ட தாமதத்தையும் பெருமளவு குறைக்கிறது.

இதுவரை சென்னையின் ஐடி அடையாளம் என்றால் அது பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் தரமணி மட்டுமே என்ற நிலை இருந்தது. ஆனால், அங்கு நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல், அதிகப்படியான வாடகை மற்றும் இடநெருக்கடி காரணமாகப் பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றுப் பகுதிகளைத் தேடத் தொடங்கியுள்ளன. 

இதன் விளைவாக, போரூர், மணப்பாக்கம், அம்பத்தூர் ஆகியவை முன்னணி ஜிசிசி மையங்களாக உருவெடுத்து வருகின்றன. குறிப்பாக, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, அம்பத்தூரில் உள்ள தொழிற்பூங்காக்களில் சர்வதேச வங்கிகள், உற்பத்தி நிறுவனங்கள் பல லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலகங்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், வெளிவட்டச் சாலை, விமான நிலைய விரைவு இணைப்பு ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் இப்பகுதிகளில் முதலீடுகளைப் பலமடங்கு உயர்த்தியுள்ளன. மேலும், பெங்களூருடன் ஒப்பிடுகையில், சென்னையில் அலுவலக வாடகை சதுர அடிக்கு 25 முதல் 35 சதவீதம் வரை குறைவாக இருப்பது முதலீட்டாளர்களைக் கவரும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

நடப்பாண்டில் சென்னையில் மட்டும் சுமார் 60 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான நவீன அலுவலக இடங்கள் கையகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தின் பொருளாதாரத்துக்கும், இளைஞர்களின் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

முந்தைய செய்தி
குட்கா வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அடுத்த செய்தி
ஏற்றுமதியை 72 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: அமைச்சர் கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்